திருச்சி மாநகராட்சி 46வது வார்டில் ‘மக்களை தேடி’ குறைதீர் முகாம்

திருவெறும்பூர்:திருச்சி மாநகராட்சி 46 வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலை, கொட்டப்பட்டு பகுதிகளில் நடந்த ‘மக்களை தேடி’ குறைதீர் முகாம் நடந்தது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் ெபாய்யாமொழி கலந்து கொண்டார். திருச்சி மாநகராட்சி 46 வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலை, கொட்டப்பட்டு பகுதிகளில் நடந்த ‘மக்களை தேடி’ குறைதீர் முகாமில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி பங்கேற்று, மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார். திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமானஅன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாநகராட்சி 46 வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலை கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் நடந்த மக்களை தேடி முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி = செயலாளரும் வார்டு மாம்மன்ற உறுப்பினருமான தர்மராஜ், வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: