×

பிரதோஷ விழா சுவாமி தரிசனம் கொரடாச்சேரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான தேர்வு

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழ் வாசித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவு சார்ந்த பயிற்சி சுமார் 780 கற்போருக்கு 31 மையங்களில் இத்திட்டம் நடைபெற்று வந்தது.  இம்மையத்தில் படிக்கும் கற்போருக்கான தேர்வு நேற்று (19ம் தேதி) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, ஊ.ஒ.தொ.பள்ளி மேப்பலம் மற்றும் ஒட்டக்குடி மையங்களை பார்வையிட்டு கற்போருக்கான ஆலோசனைகள் மற்றும் தேர்வை சிறப்பாக எழுதிட வாழ்த்து கூறினார். அவருடன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிருந்தாதேவி, தலைமையாசிரியர்கள் ராஜராஜன்,லெஷ்மி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Pradosha Festival ,Swami ,Koradacherry ,
× RELATED சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு