சிக்கலில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கடைத்தெருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜ ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பாஜவுக்கு எதிராக பேசினர். மத்திய அரசு தடை விதித்த பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை எல்இடி டிவியில் திரையிட முயன்றனர். ஆவணப்படத்தை திரையிடாமல் தடுத்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் எல்இடி டிவியை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டிவியை போலீசாரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மாற்றி மாற்றி பிடிங்கியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: