×

பொதுமக்களின் 35 ஆண்டு கோரிக்கை ஏற்பு சிவலூரில் புதிய ரேஷன் கடை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

உடன்குடி,மார்ச் 20: உடன்குடி அருகே சிவலூரில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். 35 ஆண்டு கோரிக்கை ஏற்கப்பட்டதால் சிவலூா் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உடன்குடி யூனியனுக்குட்பட்ட செட்டியாபத்து சிவலூர் மற்றும் சிவலூர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க பண்டாரஞ்செட்டிவிளைக்கு சென்று வந்தனர். தங்களது பகுதிக்கு ரேஷன் கடை அமைக்க வேண்டும் என 35ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனிடம் சிவலூரில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதன் துவக்கவிழாவிற்கு செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்மசக்தி, யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிபுத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொருட்களை வழங்கி துவங்கி வைத்தார். இதில் உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்
ஆனந்தராஜ், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், திமுக மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர் அணி மகாவிஷ்ணு, உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் சிராசூதீன், மணப்பாடு ஜெயபிரகாஷ், மகேஸ்வரன், பேரூராட்சி கவுன்சிலர் மும்தாஜ், முன்னாள் கவுன்சிலர் சலீம், ராஜா, கிளை செயலாளர்கள் வரதன், செல்வராஜ், தர்மராஜ், பொன் செல்வன், மகேஷ், சிவலூர் ஊர் தலைவர் முருகன், சுந்தர், சிவலூர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,Shivalur ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...