அருப்புக்கோட்டை பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது

அருப்புக்கோட்டை, மார்ச் 20: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கல்வி துறையின் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இதில் அருப்புக்கோட்டை எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி கால்பந்து அணியினர் எஸ்எஸ்எஸ்என் அரசு மேல்நிலைப்பள்ளி விருதுநகர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றும், எஸ்என் மேல்நிலைப்பள்ளி மம்சாபுரம் அணியை 4-3 என்ற கோல்கணக்கில் வென்றும், கால் இறுதி ஆட்டத்தில் பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றும், அரை இறுதி ஆட்டத்தில் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி விருதுநகர் அணியிடம் டைபிரேகர் சடன் டெத் முறையில் 4-5 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கேஎஸ்ஜி ஆமத்தூர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றனர்.

மூன்றாம் இடம் பெற்ற 18 வீரர்களுக்கும் பணம், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டது. அருப்புக்கோட்டை எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி கால்பந்து அணியின் ஐந்து வீரர்கள் விருதுநகர் மாவட்ட அணியகங் தேர்வு பெற்று வரும் மே மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கால்பந்து விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்த எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி கால்பந்து வீரர்களையும், மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த கால்பந்து வீரர்களையும் உடற்கல்வி இயக்குனர் சவுந்திரபாண்டியன், உடற்கல்வி ஆசிரியர் பிரபு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் நாடார்கள் உறவினர் தலைவர் காமராஜன், கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன், பள்ளி தலைவர் பாபு உதவி தலைவர் கனகவேல், உதவி செயலாளர் செந்தூரான், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Related Stories: