திருச்சுழியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

திருச்சுழி, மார்ச் 20: திருச்சுழியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி தொகுதி செயலாளர் பைசல்கனி தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை நகர தலைவர் சகுபர்சாதிக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சுழியை சுற்றிலும் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் படித்த பின்னர் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

கொரனோவிற்கு முன்பு திருச்சுழி ரயில் நிலையத்தில் சிலம்பு எக்ஸ்பிரஸ் நின்று சென்றது. ஆனால் தற்போது இந்த ரயில் கொரனோவை காரணம் காட்டி நிற்காமல் செல்கிறது. எனவே திருச்சுழி ரயில் நிலையத்தில் சிலம்பு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து வர்த்தக அணி மாவட்ட பொருளாளர் சம்சுதீன் கையெழுத்து இயக்கத்தை துங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மற்றும் தோழமை கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: