தோட்டக்கலைத்துறை சார்பில் கோகோ சாகுபடி பயிற்சி முகாம்

பெரியகுளம், மார்ச் 20: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கொச்சி (கேரளா) முந்திரி கோகோ மேம்பாட்டு இயக்ககம் இணைந்து தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கோகோ சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது. தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற பயிற்சியினை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மலைத் தோட்ட பயிர்கள் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் ராமர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கர்நாடகா விட்டல் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் எலைன் அப்ஷ்ரா கோகோ நவீன சாகுபடி குறித்து விரிவாக உரையாற்றினார். மாண்டலீஸ் இந்திய உணவு நிறுவன மேலாளர் சிவக்குமார் கோகோவில் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் வாய்ப்புகள் குறித்து விளக்கமாக கூறினார். இணை பேராசிரியர் பிரபு கோகோவில் அங்கக முறைகள் சாகுபடி குறித்து விளக்கினார். உதவி இயக்குனர் துரைசாமி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இணை பேராசிரியர் பிரபு பயிற்சியை ஒருங்கிணைத்து அனைவருக்கும் நன்றி கூறினார். மாவட்ட அளவிலான இந்த பயிற்சியில், தேனி மாவட்ட அளவில் 100 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories: