ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

கீழக்கரை, மார்ச் 20: ஏர்வாடி அருகே சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலம் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். இங்கு புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்தை பார்வையிட்டு நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரதாப் குமார், மருத்துவ அலுவலர் வினோத்குமார், கடலாடி கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்கள் குலாம் முகமது, ஜெயபால், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேல்சாமி, சிக்கல் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், சுகாதார ஆய்வாளர்கள் செல்லதுரை, சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: