திருப்பூர் ஜம்மனை பள்ளம் பகுதியில் மேயர் ஆய்வு

திருப்பூர், மார்ச் 20: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜம்மனை பள்ளம் பகுதியில் மேயர் தினேஸ்குமார் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்து வருகிறார். குறிப்பாக பொதுமக்கள் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜம்மனை பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதனை கேட்ட மேயர் தினேஷ்குமார், பொதுமக்கள் முன்னிலையிலேயே அதிகாரிகளை உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிரடியாக உத்தரவிட்டார்.

Related Stories: