×

தமிழகத்தில் சாமி சிலைகள் கடத்தல் தடுக்க கோரிக்கை

திருப்பூர், மார்ச் 20: தமிழகத்தில் சாமி சிலைகள் கடத்தலை தடுக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்தியாவில் ஆலயங்கள் இந்துக்களின் வழிபாட்டு தலமாக மட்டும் இன்றி, வாழ்க்கையோடு ஒன்றிணைந்த கலாச்சார பண்பாட்டு மையமாக உள்ளது. ஆலயத்தில் இருக்கும் தெய்வ சிலைகள், கலாச்சாரம் மற்றும் நம் நாட்டின் கலை நுட்பத்தை பறைசாற்றுபவை. ஆலயங்கள் நிறைந்துள்ள தமிழகத்தில், தெய்வ சிலைகள் திருடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. திருடப்பட்ட பல சிலைகள், சிலை தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் மூலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த சிலைகள் உரிய ஆலயங்களில் இதுவரை ஒப்படைக்கப்படாமல், கருவூலத்தில் இருந்து வருகிறது.

வேலூர் மாவட்டம் அரியூர் காவல்துறை சோதனையின் போது, மலையூரில் கருவேப்பிலை கட்டுக்குள் ஒன்றரை அடி உயரம் உள்ள சிவகாமி அம்மாள் ஐம்பொன் சிலையை கடத்த முயன்றதாக குற்றவாளிகளை  போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மெத்தனமாக இருக்கும் காரணத்தினால், இது போன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க, தமிழக அரசு சிலை தடுப்பு போலீசுக்கு என தனியாக ஒரு ஆணையம் அமைத்து அதற்கு இயக்குநராக பொன் மாணிக்கவேலை நியமித்தும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் மிகவும் நேர்மையாக செயல்படக்கூடிய அதிகாரிகளை நியமித்தும் சிலை திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sami ,Tamil Nadu ,
× RELATED மன்னார்குடி அருகே காளியம்மன்...