திருப்பூர் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.2 கோடி நிதி வழங்கல்

பல்லடம், மார்ச் 20: திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், பொது நல அமைப்புகள் மற்றும் தமிழக அரசு. திருப்பூர் மாநகராட்சி ஆகியவை சார்பில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  ரூ.90 கோடியில் இந்தியாவிலேயே அதி நவீன மருத்துவ கருவிகளுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது. இம்மையத்திற்கு மும்பை இ.சி.ஜி.சி அமைப்பின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.செந்தில்நாதன் ரூ.2 கோடிக்கான  காசோலையை செய்தித்துறை அமைச்சர்  மு.பெ. சாமிநாதனிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சங்க தலைவர் எ.சக்திவேல், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்க பட்டய தலைவர் தங்க லட்சுமி நடராஜன், தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: