புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தேர்வு எழுதிய பழங்குடியின மக்கள்

கூடலூர், மார்ச் 20: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்து தேர்வு எழுதிய பென்னை பழங்குடியின முதியவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பென்னை ஊராட்சி ஒன்றிய பள்ளி தேர்வு மையத்தில் நேற்று இத்திட்டத்தில் படித்த 25 வயது முதல் 75 வயது வரையிலான 11 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத வந்த பழங்குடியின மக்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், கல்விக்குழு தலைவர் செரின்ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: