கோவை அருகே கடுப்புலு அம்மன் கோயிலில் பங்குனி யுகாதி திருவிழா

தொண்டாமுத்தூர், மார்ச் 20:  கோவை அருகே சிறுவாணி மெயின் ரோடு சித்திரை சாவடி கடுப்புலு அம்மன் கோயிலில் பங்குனி யுகாதி திருவிழா நேற்று கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தீர்த்தம் எடுக்க திருமூர்த்தி மலைக்கு பக்தர்கள் குழுவினர் புறப்பட்டனர். நாளை காலை 9 மணிக்கு அமாவாசை பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், தீர்த்தம் எடுக்க பூண்டி கோவிலுக்கு செல்லுதல், தொடர்ந்து மாலை 5 மணிக்கு தொம்புலிபாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம், திருமூர்த்தி மலை மற்றும் பூண்டி தீர்த்த குடங்கள், பம்பை வாத்தியங்களுடன் வானவேடிக்கையுடன், அம்மன் அழைத்து வருதல் நடக்கிறது. 22ம் தேதி காலை 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை பூஜைகள் பட்டக்காரர் கிருஷ்ணசாமி முன்னிலையில் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழு ஆலோசர்கள் செயகுழு உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.

Related Stories: