திருச்சியில் காஸ் சிலிண்டர் திருடியவர் கைது

தில்லைநகர், மார்ச் 19: உறையூரில் சிலிண்டர் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். திருச்சி உறையூர் சாலை ரோடு வெட்டுபுலி சந்தில் குடியிருந்து வருபவர் முகமது அக்ரம் அலி (37). இவர் நேற்றுமுன்தினம் மதியம் தனது வீட்டு வாசலில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரை காணவில்லை என உறையூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உறையூர் முஸ்லிம் தெருவை சேர்ந்த மன்சூர் அலி (22) என்பவர் காஸ் சிலிண்டரை திருடியது தெரியவந்தது. அதையடுத்து அவரை கைது செய்து அவர் திருடிய சிலிண்டரை பறிமுதல் செய்தனர் , பின்னர் மன்சூர்அலி மீது மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

Related Stories: