×

பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளிக்கு லேப்டாப்

பெரணமல்லூர், மார்ச் 19: பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளிக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக இணைய வழி கல்வியை ஊக்குவிக்க லேப்டாப் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக 13 அரசு நடுநிலைப் பள்ளிகளில் இணையவழி கற்றல், கற்பித்தல் வழியே 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர்களுக்கு கணிதம், ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழக பாடநூல் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இணைய வழி கற்றல், கற்பித்தலை வலுப்படுத்தும் விதத்தில் நேற்று கோணாமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு லேப்டாப், இணையத்தைப் பயன்படுத்துவதற்கு மோடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு லேப்டாப் மற்றும் மோடத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் பூங்காவனத்திடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சம்பத், உஷா, திருநாவுக்கரசு மணிமேகலை மற்றும் மாணவர்கள் கலந்து பலர் கொண்டனர்.

Tags : School ,Peranamallur ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி