ராஜபாளையத்தில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

ராஜபாளையம், மார்ச் 19: ராஜபாளையத்தில் வீட்டில் இருந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி பாண்டிச்செல்வி (36). இவர்களுக்கு குழந்தை கஇல்லை. ராசு மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாண்டிச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் மின்சாரம் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரத்தை இழுத்துள்ளார்.

அப்போது வயரில் இருந்து இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அதை அறியாமல் பாண்டிச்செல்வி கதவை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் பேச்சு மூச்சு இன்றி கிடந்த பாண்டிச்செல்வியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: