முதல்வர் அடிக்கல் நாட்டிய பள்ளி வகுப்பறை கட்டும் பணி தீவிரம்

சின்னமனூர், மார்ச் 19: சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் கிராம ஊராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏழை எளியோர் விவசாயிகள் பொதுமக்களின் பிள்ளைகள் படிப்பதற்காக சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் 60 ஆண்டுகள் தாண்டிய கட்டிடங்கள் பழுதாகி மழை பெய்தால் ஒழுகும் நிலையும் இருந்ததால் மாணவ,மாணவியர் குழந்தைகள் ஆசிரியர்கள் என பலரும் சிரமம் அடைந்தனர். இங்கு இரண்டு புதிய வகுப்பறைகள் தேவை என்பதால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் கல்வி துறைக்கும் புகார் சென்றதால் அதிகாரிகளும் ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக அடி க்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதன்படி பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் வாயிலாக 33 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில் பள்ளி வளாகத்திற்குள் இரண்டு வகுப்பறைகள் கட்டுமான பணிகள் முதற்கட்டமாக பேஸ் மட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: