நுகர்வோர் உரிமைகள் தின விழா

காரைக்குடி, மார்ச் 19: காரைக்குடி அருகே கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் உலக நுகர்வோர் தின விழா கொண்டாப்பட்டது. துறைத்தலைவர் சீதாலட்சுமி வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் சீர்வளர்சீர் நாராயண ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். தொழில்வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, பாண்டியன் கிராம வங்கி முன்னாள் பொது மேலாளர் ராமநாதன், இன்சூரன்ஸ் நிறுவன கோட்ட மேலாளர் சாமிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கஸ்தூரி நன்றி கூறினார்.

Related Stories: