தேவகோட்டை அருகே புனித லெவே விண்ணகப் பிறப்பின் பொன்விழா ஆண்டு விழா 21ம் தேதி நடக்கிறது

தேவகோட்டை, மார்ச் 19: கிறிஸ்தவப் பாதிரியாராக பணியாற்றிய லூயி மரி லெவே பிறந்த தின பொன்விழா ஆண்டு விழா 21ம் தேதி தேவகோட்டை அருகே சருகணியில் நடக்கிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகணியில் பழமையான திரு இருதயங்களின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில்  பங்குத்தந்தையாக லூயி மரி லேவே 1943 முதல் 1956ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் இறை பணியாற்றினார். இவர் 1884 ஏப்ரல் 6ம் தேதியன்று பிரான்சில் பிறந்தார். 1906ம் ஆண்டு அக்டோபர் 6ம் நாள் இயேசு சபையில் சேர்ந்தார்.

தேவகோட்டை அருகே சருகணியில் இறைபணியாற்றுகையில் தனது இறப்பை தீர்மானித்து தேவாலயத்தின் அருகில் தனக்கென கல்லறையை தானே உருவாக்கி 1973ம் ஆண்டு மார்ச் 21ம் நாள் இறைவனடி சேர்ந்தார். லூயி மரி லெவேவிற்கு ரோமில் உள்ள கிறிஸ்தவ சபையில் போப்பாண்டவர் மூலம் புனிதர் பட்டம் வழங்க சிவகங்கை மறை மாவட்ட மக்களின் நீண்ட கால வேண்டுகோளாக கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு 9ம் தேதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மனிதரில் புனிதராக மதிக்கப்படும் லெவே சாமிக்கு நாளை மறுதினம் 21ம் தேதியன்று சருகணி திரு இருதயங்களின் ஆலயத்தில் விண்ணகப்பிறப்பின் பொன்விழா கொண்டாடப்படுகிறது. அன்று முழுவதும் சிறப்பு திருப்பலிகள், ஊர்வலம், அன்னதானம், இறைஊழியர் லெவே நாடகம் நடைபெறுகிறது. விழாவில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பத்தாயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்குப்பணியாளர் ஜேம்ஸ் தலைமையில் பங்கு அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: