உலக நுகர்வோர் தினவிழா

ராமேஸ்வரம், மார்ச் 19: தங்கச்சிமடம் அன்னை கொலஸ்டிகா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஆனிபெர்பெட் சோபி தலைமை வகித்தார். தங்கச்சிமடம் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் ஜான்போஸ் வரவேற்றார். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விஜயகுமார், பாதுகாப்பான உணவு முறைகள், அயோடின் உப்பு பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் , நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் பாண்டி, பொருளாளர் தர்மபுத்திரன் ஆகியோர் பேசினர். கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: