வறண்ட காவிரி ஆறு மகளிர் தங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

ஈரோடு, மார்ச் 19: ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் நிறுவனம் நடத்தும் மகளிர் விடுதி மற்றும் அனைத்து பெண்கள் தங்கி பயிலும் மகளிர் கல்லூரி விடுதிகள் அரசிடம் உரிமம் பெற்று விடுதிகள் இயக்கப்பட வேண்டும்.

மகளிர் விடுதிகள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மற்றும் பதிவினை புதுப்பித்து கொள்ளாதவர்கள் அனைவரும் தங்களது கருத்துரு உடன் வருகிற ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் 6வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுக வேண்டும். மகளிர் விடுதிகளை பதிவு செய்யாமலோ அல்லது ஏற்கனவே உள்ள உரிமத்தை புதுப்பிக்காமல் செயல்படுவது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு கலெக்டா் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: