கொடைக்கானலில் பறவை அணில் இறப்பு

கொடைக்கானல், மார்ச் 19: கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதி சாலையில் நேற்று முன்தினம் பறவை அணில் ஒன்று இறந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் பறவை அணிலின் சடலத்தை கைப்பற்றினர். மேலும் இந்த பறவை அணில், கொடைக்கானலில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அடிபட்டு இறந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: