அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருவாரூர் ரயில் நிலைய சந்திப்பு மேம்படுத்தும் பணி: திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர், மார்ச் 19: திருவாரூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொள்வதற்கு திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் திட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் சந்திப்பு அல்லது நிலையங்களை தொலைநோக்குப் பார்வையில் மேம்படு த்துதல் ஆகும். குறிப்பாக, பயணிகளுக்கு உண்டான இருக்கைகள், காத்திரு ப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டிடங்கள் கட்டுவது ஆகும். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா 15 ரயில் சந்திப்பு கள் அடையாளம் காணப்பட்டு மார்ச் 2024 க்குள் பணிகள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதில், திருச்சி கோட்டத்தில் உள்ள திருவாரூர் ரயில் சந்திப்பும் ஒன்று.

இந்நிலையில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம் தலைமையில்முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு) ராஜராஜன், கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவி க்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை திருவாரூர் ரயில் நிலையத் தில் உள்ள பல பகுதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தினர். இக்குழுவினரை, திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப் பினர்பாஸ்கரன் வரவேற்று பயணிகளுக்கு தேவையான கோரிக் கைகளை அவர்களிடம் விளக்கி கூறினார். இந்த ஆய்வுக் குறித்து அதிகாரிகள் கூறுகையில், திருவாரூர் ரயில் சந்திப்பில் மேம்படுத்துதல் பணிகள் அடுத்தடுத்து கட்டங்களில் சிறப்பாக செயல் படுத்த உள்ளது. அதே நேரத்தில் பயணிகள் ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையிலும் கையாள வேண்டும். ரயில்வே சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பயணிக்க வேண்டும் என்றனர். ஆய்வின்போது, நிலைய மேலாளர் குமரன், வணிக ஆய்வாளர் உதய சுகு மாரன், போக்குவரத்து ஆய்வாளர் சத்தியன், பொறியாளர் செல்வகுமார், பணிகள் ஆய்வாளர் அன்புச்செல்வம் மற்றும் ரயில்வே காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: