×

தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் காவிரி இலக்கிய திருவிழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்

தஞ்சாவூர், மார்ச் 19: தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிரவாகம் சார்பில் \”2023 காவிரி இலக்கியத் திருவிழா\” வை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: தமிழ்நாட்டின் பெருமைமிகு, சிறப்புமிகு நதிகளில் என்றும் இளமையும் வளமையும் கொண்ட பொன்னி என சிறப்புபெற்ற காவிரி நதியினைப் போற்றிடும் வகையில், காவிரி நதிக்கரை மக்களின் பண்பாட்டினை நினைவுகூறும் வகையில் அது சார்ந்த இலக்கியம். வாசிப்பு என அறிவார்ந்த பரப்பில் பல ஆளுமைகள் கொண்டு கொண்டாட்டமாக காவிரி இலக்கியத் திருவிழா இன்றும் நாளையும் தஞ்சையில் சரசுவதி மகால் நூலகத்தில் சரஸ்வதி மகால் மற்றும் சங்கீத மகால் என இரண்டு அரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் 45க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள் 30க்கு மேற்பட்ட தலைப்புகளில் இரண்டு நாட்களும் இலக்கிய விருந்தளிக்க உள்ளனர்.இந்த இரண்டு நாட்கள் இலக்கிய நிகழ்வுகள் முழுமையும் இணையவழி நேரடியாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் யூ டியூப் சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு உலகெங்கும் பகிரப்படும் காவிரி இலக்கியத் திருவிழா தமிழகத்தின் கலை, பண்பாட்டு மற்றும் மரபினை பிரதிபலிக்கும் விழாவாக அமையும்.விழாவில் நூலக நண்பர்கள், வாசகர்கள்,திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு). டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு. அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் எழிலன், சரஸ்வதி மஹால் நூலகம் நிர்வாக அலுவலர் முத்தையா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் முத்து, முத்துக்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cauvery Literature Festival ,Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Thanjavur Saraswati Mahal ,
× RELATED தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா...