×

பொறையாறு அருகே சங்கரன்பந்தலில் ரூ.2.கோடியில் புதிய பாலம்

செம்பனார்கோயில், மார்ச் 19: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் கிராமத்தில் இலுப்பூர்-உத்தரங்குடி ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் வகையில் வீரசோழனாற்றின் குறுக்கே பாலம் இருந்தது. இந்த பழமையான பாலம் வழுவிழந்து சேதமடைந்து. இதனால் மேற்படி பாலத்தை பயன்படுத்தி வந்த சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போக்குவரத்து வசதி கருதி புதிய பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்ற பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகனின் முயற்சியால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.2 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட உத்தரவிட்டார்.

அந்த புதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பொறையாறு அருகே சங்கரன்பந்தலில் நடைபெற்றது. இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.தர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அமுர்தவிஜயகுமார், அன்பழகன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம பொதுமக்கள், கிராம பஞ்சாயத்தார்கள், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Sankaranbandal ,Porayar ,
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்