அரவக்குறிச்சி, மார்ச் 19: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கையான கரூர் முதல் பழனி வரை ரயில் கனவு நிறைவேறுமா என்று பொதுமக்கள், வணிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது ரயில் தொடர்பு இல்லாத 50 ஆயிரம் மக்களுக்கு மேல் வசிக்கும் ஊர்களுக்கு ரயில் வசதி செய்து கொடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கோவை மாவட்டம்- வால்பாறை, ஈரோடு மாவட்டம்- கோபிசெட்டிபாளையம்,சேலம் மாவட்டம்- எடப்பாடி, சிவகங்கை மாவட்டம்- தேவகோட்டை, தேனி மாவட்டம்- கம்பம்,திருப்பூர் மாவட்டம்- தாராபுரம், வேலூர் மாவட்டம்- பேரணாம்பட்டு, கள்ளக்குறிச்சி- கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு இணைப்பு கொடுப்பதற்காக ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் கரூர் முதல் பழனி வரை, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி இடையகோட்டையை இணைத்து இதன் வழியாக ரயில் போக்குவரத்து வசதி வேண்டுமென மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.