×

கரூர் முதல் பழனி வரை ரயில் கனவு நிறைவேறுமா பொதுமக்கள், வணிகர்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி, மார்ச் 19: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கையான கரூர் முதல் பழனி வரை ரயில் கனவு நிறைவேறுமா என்று பொதுமக்கள், வணிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது ரயில் தொடர்பு இல்லாத 50 ஆயிரம் மக்களுக்கு மேல் வசிக்கும் ஊர்களுக்கு ரயில் வசதி செய்து கொடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கோவை மாவட்டம்- வால்பாறை, ஈரோடு மாவட்டம்- கோபிசெட்டிபாளையம்,சேலம் மாவட்டம்- எடப்பாடி, சிவகங்கை மாவட்டம்- தேவகோட்டை, தேனி மாவட்டம்- கம்பம்,திருப்பூர் மாவட்டம்- தாராபுரம், வேலூர் மாவட்டம்- பேரணாம்பட்டு, கள்ளக்குறிச்சி- கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு இணைப்பு கொடுப்பதற்காக ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் கரூர் முதல் பழனி வரை, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி இடையகோட்டையை இணைத்து இதன் வழியாக ரயில் போக்குவரத்து வசதி வேண்டுமென மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மக்கள் இந்தியா முழுவதும் வணிகத் தொடர்பில் இருக்கிறார்கள் அவர்களுடைய பயணத்திற்காகவும் 50000 மக்களை மேற்கொண்ட ஓர் ஊராக விளங்கக்கூடிய ஊர்களுக்கு இதுவரை ரயில் போக்குவரத்து வசதி செய்யக்கோரி பலமுறை கூறியும் ஆய்வு நடவடிக்கை நடைபெறவில்லை. எனவே இந்த 9 மாவட்டங்களில் கரூர் மாவட்டத்தையும் இணைத்து, கரூரில் இருந்து பழனிக்கு ரயில் விடுவதற்கான வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த கோரிக்கையை கரூர் எம்பி, எம் எல் ஏ ஆகியோர் உரிய முறையில் ஒன்றிய அரசுக்கு எடுத்துச் சென்று, இந்த அரிய வாய்பை பயன்படுத்தி அரவக்குறிச்சி பள்ளப்பட்டிக்க்கு ரயில் வசதியை செய்து தர வேண்டும். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கையான கரூர் முதல் பழனி வரை ரயில் கனவு நிறைவேறுமா என்று இப்பகுதியில் வணிகம் செய்யும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Karur ,Palani ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...