×

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சேவுகம்பட்டி சுங்கச்சாவடி விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

பட்டிவீரன்பட்டி, மார்ச் 18: 2010ல் ரூ. 333.18 கோடி மதிப்பில் திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை புறநகர் பகுதிகளில் அமைக்கும் பணி தொடங்கியது.தற்போது இப்பணிகள் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தேனிமாவட்டம் உப்பார்பட்டி அருகே சுங்கச்சாவடி திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தேனி புறவழிச்சாலை பணிகள் முடிவடையகாலதாமதம் ஆனதால் சேவுகம்பட்டி சுங்கச் சாவடி பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனிடையே தேனி புறவழிச்சாலை பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் விரைவில் சேவுகம்பட்டி சுங்கச்சாவடி விரைவில் பயன்பாட்டிற்கு வரஉள்ளதாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கான சுங்கக்கட்டணம் வசூல் செய்யவுள்ள விபரம் அடங்கியபலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி கார், ஜீப், வேன் உள்ளிட்டஇலகு ரகவாகனங்களுக்கு ரூ.80, 24 மணி நேரத்தில் திரும்பி வந்தால் ரூ.120 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது- இந்தவாகனங்களுக்கு மாதாந்திரகட்டணம் ரூ.2,670 ஆகும். இதன் மூலம் மாதத்துக்கு 50 தடவைகள் இந்தசாவடியை கடக்கலாம்.இதேபோல் இலகு ரகவணிகவாகனங்கள் மினி பஸ்ஆகியவற்றுக்கு ரூ.130, பேருந்து, டிரக் போன்றவற்றுக்கு ரூ.270, மூன்று அச்சுகள் கொண்ட வணிகவாகனங்கள் ரூ.295, கனரக கட்டுமானஇயந்திரங்கள், எர்த் மூவர்ஸ் நான்கிலிருந்து ஆறு வரை அச்சுகள் உள்ள வாகனங்கள்ஆகியவற்றுக்கு ரூ. 425, ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட நீளமானவாகனங்களுக்கு ரூ 520 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் மூலம் வாகனஉரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இந்த சுங்கச் சாவடி திண்டுக்கல் மாவட்டத்தின் 2 வது சுங்கச் சாவடி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Sevukambatti ,Pattiveeranpatti ,
× RELATED பிஎஸ்என்எல் டவர்களில் சோதனை ஓட்டம்