கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் துவக்கம்

கந்தர்வகோட்டை,மார்ச் 18: கந்தர்வகோட்ைட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை நிதியில் இருந்து ஸ்மார்ட் கிளாஸ் மாணவ- மாணவிகளின் நலனுக்காக துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை ஏற்று இருந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளரும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் ரெத்தினவேல் (எ) கார்த்திக் மழவராயர் ஆகியோர் முன்னிலை வகித்தார். அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி ஆணையர்கள் நளினி, திலகவதி, வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, நரசிமன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜா, அரவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுமார், மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின் நாராயனசாமி, மங்களூர் கோபால், மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், கட்சி பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: