×

பெரம்பலூரில் 3 இடங்களில் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பெரம்பலூர், மார்ச் 18: பெரம்பலூர், எசனை, லாடபுரத்தில் மாற்றுத் திறனாளி மா ணவர்களின் பெற்றோர்க ளுக்கான விழிப்புணர்வு பயிற்சியில் 150 பேர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட ஒருங் கிணைந்த பள்ளி கல்வித் துறை மூலம் மாற்றுத் திற னாளி மாணவர்களின் பெ ற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி, பெரம்பலூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாடபுரம் ஆதி திராவிடர் நல உயர்நி லைப்பள்ளி, எசனை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. பெரம்பலூர் (கிழக்கு) ஊரா ட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, வட்டாரக் கல்வி அலுவலர் அருண்குமார், உள்ளடக்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகா தார செவிலியர் உமாமகேஸ்வரி கலந்துகொண்டு மாற்றுத் திறனாளி குழந்தை களின் பெற்றோர்களுக்கு புரியும்படி கலந்துரையாடல் மூலம் எடுத்துக் கூறினார். உள்ளடக்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் உள்ளடக்கிய கல் வி மையங்களில் இலவச மாக வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கிப் பே சினார். குழந்தைகளின் உடல் சமநிலை குறித்து இயன்முறை மருத்துவர் செயல்விளக்கத்துடன் பே சினார்.

மேலும் சிறப்பு பயிற்றுநர் துர்கா வலிப்பு வரு ம்பொழுது கையாளவேண் டிய சிகிச்சைமுறைகள்குறி த்தும், அரசு தலைமை மருத் துவமனை ஊட்டச்சத்து நிபு ணர் ஜூலி உணவு முறை கள் குறித்தும், சிறப்பு பயி ற்றுநர் மகேஸ்வரி மாற்றுத் திறனாளி உபகரணங்கள் குறித்தும்பேசினர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் திருமலச்செல்வி வரவேற்றார். உத வி ஆசிரியர் ஷம்சுனிஷா பேகம் நன்றிகூறினார்.

இதேபோன்று எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிற ப்பாசிரியர்கள் ராணி பரிமளா, ரூபி, செவிலியர் ஜெசிந்தாவும், லாடபுரம் ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாசிரியர் கள் மரகதவல்லி, தனவேல், செவிலியர் சரோஜா ஆகியோர் பயிற்சியளித்தனர். ஏற்பாடுகளை மைய பொ றுப்பாளர்கள் சுமதி,தேவகி, அமுதா, பிரேமா,மாரியாயி, ஜெயமேரி செய்திருந்தனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி