நாகப்பட்டினம்,மார்ச்18: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 7 கோடியே 50 லட்சம் மதிப்பில் தாலுகா மற்றும் நகர் ஊரமைப்பு அலுவலக கட்டுமான பணிக்கான அடிக்கல் நடும் விழா நடந்தது. நாகப்பட்டினம் கோர்ட் வளாகத்தில் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதையடுத்து அலுவலகத்தை புதுபிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.