சிவகாசி, மார்ச் 17: விருதுநகர் மாவட்டத்தில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையிடம் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் 800க்கு மேல் உள்ளன. பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் பேரியம் நைட்ரேட் வேதிபொருள் பயன்படுத்தக் கூடாது. சரவெடி தயாரிக்க கூடாது என உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு பட்டாசு ஆலைகளில் கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணித்திட வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதில் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் கடந்த 2022ல் நடத்திய ஆய்வில் விதிமீறி செயல்பட்ட 70 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்த செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 70 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன.