காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் ரூ.3 கோடியில் கண்மாய் தூர்வாரும் பணி: அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார்

காரியாபட்டி, மார்ச் 17: காரியாபட்டி தாலுகா எம்.இலுப்பைக்குளம், எஸ்.கடமங்குளம், நரிக்குடி ஒன்றியம், களத்தூர், கீழக்கொன்றைக்கும் ஆகிய 4 கண்மாய்களை நீர்வளத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காரியாபட்டி தாலுகா எம்.இலுப்பைகுளம் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரும் பணியை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள கண்மாய்களை மேம்படுத்த தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்மாய் மேம்பாடு செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தக் கண்மாயில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும். கோடைகாலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் இத்திட்டம் ஏதுவாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி திமுக ஒன்றிய செயலாளர் செல்லம், கண்ணன், பேரூராட்சி தலைவர் செந்தில், காரியாபட்டி யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன், டி.வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதீஸ்வரன், காரியாபட்டி விவசாய சங்க ஆத்மா குழு தலைவர் இலுப்பைகுளம் கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், டி.வேப்பங்குளம் தண்டீஸ்வரன், காரியாபட்டி நகர தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மனோஜ் பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: