×

தேனியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தேனி, மார்ச் 17 :தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று (மார்ச் 17) தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இம்முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீர் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள், தையல் பயிற்சி முடித்தவர்கள் பல்வேறு கல்வித் தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுனர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் வந்து கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

Tags : Theni ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்