சோலார் பவர் மின்விளக்குகளால் ஜொலிக்கும் விராலிமலை முருகன்கோயில் தார்சாலை

விராலிமலை: விராலிமலை முருகன் மலைக்கோயிலுக்கு மேலே செல்லும் தார் சாலையில் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் பவர் மின் கம்பங்களால் தார் சாலை, கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது. விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் ஆறுமுகங்களுடன் மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக கடந்த காலம் தார் சாலை அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட தார் சாலையின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளின் மீது கடந்த வாரம் சுமார் ரூ.4 லட்சம் செலவில் எஸ்எஸ் கைப்பிடி பைப் அமைக்கப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு பயணம் உறுதி செய்யப்பட்டது.  

அதனை தொடர்ந்து 14 சோலார் பவர் மின்கம்பங்கள் தார் சாலை ஓரங்களில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 14 சோலார் பவர் மின்னொளி கம்பங்களால் தார் சாலை இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கிறது.  கடந்த இரண்டு நாட்கள் முன்பு வரை இருள் சூழ்ந்து கிடந்த தார் சாலை தற்போது மின்னொளியில் ஜொலிப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதோடு இரவு நேரங்களில் மலை மீது செல்லும் பக்தர்களின் பயணம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: