×

பயணிகள் நடைபாதையில் வாகனங்கள் செல்லும் அவலம்: பாதசாரிகள் திண்டாட்டம்

நெல்லை:  கொக்கிரகுளத்தில் சிக்னல் நடைமுறை சிக்கல்கள் காரணமாக கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் நடைபாதையில் வாகனங்கள் செல்கின்றன.நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆறு புதிய பாலம் திறக்கப்பட்ட பின்னரும், அங்கு சிக்னல் நடைமுறைக்கு வராமல் இருந்தது. நெருக்கடி குறைவான அப்பகுதியில் நாலாபுறமும் வாகனங்கள் எளிதாக சென்று வந்தன. இந்நிலையில் கடந்த வாரம் முதல் போக்குவரத்து போலீசார் கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை அருகே சிக்னல் சிஸ்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். அப்பகுதியில் தெற்கு, கிழக்கில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டுமே சிக்னல் உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து கொக்கிரகுளம் செல்லும் வாகனங்களுக்கு சிக்னல் வைப்பதற்கு இடமில்லை. எனவே நெல்லை சந்திப்பில் இருந்து வாகனங்கள், கொக்கிரகுளத்தில் நின்று நிதானித்து சந்திப்பை தாண்டி வருகின்றன. கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை துவங்கி, கலெக்டர் அலுவலக வாசல் வரை பாதசாரிகள் நடந்து செல்வதற்கு நடைபாதையும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலெக்டர் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். இந்நிலையில் வண்ணார்பேட்டையில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு கொக்கிரகுளம் சிக்னலில் இடதுபுறமாக திரும்புவதற்கு இடமில்லை. அங்குள்ள சிக்னலில் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் சில டூவீலர்கள், ஆட்ேடாக்கள்  மற்றும் கார்களில் செல்வோர் ஏடிஎம் மிஷன் உள்ள சாலையில் கீழிறங்கி, மீண்டும் கொக்கிரகுளம் சாலையில் ஏற முற்படுகின்றனர்.சாலையில் ஏற முற்படும்போது பாதசாரிகளுக்கு நடைபாதை காணப்படும் நிலையில், அதையும் பைக்கிலும், காரிலும் சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றனர். இதனால் நடைபாதையில் நடந்து வரும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். திடீரென கீழிருந்து பைக் வந்து நடைபாதையில் ஏறும்போது, பயணிகள் அச்சத்தோடு பார்க்கின்றனர். எனவே கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக நடைபாதையில் பொதுமக்கள் சிரமமின்றி நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்….

The post பயணிகள் நடைபாதையில் வாகனங்கள் செல்லும் அவலம்: பாதசாரிகள் திண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kokrakulam ,Tamiraparani river ,Nellai Kokrakulam ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...