ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்தப்படும் பணியில் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தில் தீவிர படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும் சுகாதாரத்திற்க்கு கேடு விளைவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில், நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டனர்.

உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் சாம்கர்னல் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் ரமேஷ் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் நகர் பகுதி முழுவதும் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்தனர். அப்போது, பன்றிகளை வளர்க்கும் இளைஞர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் வண்டிகளை அடித்து உடைத்து விடுவதாக கூறியதால், மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.இந்நிலையில் பன்றிகளை வளர்ப்பவர்கள் அதற்கான வழிமுறைகளுடன் வளர்க்க வேண்டும் நகர் பகுதியில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் வகையில் சுற்றி திரியும் பன்றிகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: