சத்துவாச்சாரியில் இருந்து ஜலகண்டேஸ்வரர் சுவாமி வீதி உலா 42ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு

வேலூர், மார்ச் 17: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் 42ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு சத்துவாச்சாரியில் இருந்து அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் சுவாமி ஊர்வலம் புறப்பட்டு கோட்டை கோயிலை அடைந்தது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வேலூர் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, கடந்த 1983ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி மூலவரான ஜலகண்டேஸ்வரர் சிலை சத்துவாச்சாரி ஜலகண்ட விநாயகர் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் 40ம் ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது.

இதற்காக அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக புறப்பட்டு சத்துவாச்சாரி ஜலகண்ட விநாயகர் கோயிலை அடைந்தன. அங்கு கோயிலில் ஜலகண்ட விநாயகருக்கும், ஜலகண்டேஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் கோ பூஜை, கன்யா பூஜையுடன் 108 சுமங்கலிக்கு மஞ்சள், குங்குமம் மாங்கல்ய சரடு அளிக்கப்படடது. தொடர்ந்து அங்கிருந்து உற்சவ மூர்த்திகள் மீண்டும் மேளதாளம் முழங்க வேலூர் கோட்டை கோயிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றபோது ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.

Related Stories: