×

தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கள ஆய்வு

தென்காசி, மார்ச் 17: தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கள ஆய்வு மேற்கொள்கிறார் என்று அமைச்சர் ேககேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். தென்காசி கலெக்டர்  அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் அனைத்துத் துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எஸ்பி சாம்சன், திமுக மாவட்டச் செயலாளர்கள் சிவ பத்மநாதன், ராஜா எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில் ‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்று அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அனைத்துத் துறை அலுவலர்களும் வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடித்து தகுதிவாய்ந்த பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டு முதலைமச்சரின் ஆய்வுக்கூட்டம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் விரைந்து முடிக்க வேண்டும்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலமாக 5 பேருக்கு ரூ.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி, மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 4 பேருக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக 3 பேருக்கு ரூ.14.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி, மாவட்ட மற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக ஒருவருக்கு ரூ.12,500 மதிப்பிலான நலத்திட்ட உதவி, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக 3 பேருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக 5 பேருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவி, சமூக நல அலுவலகத்தின் மூலமாக 5 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத் துறையின் மூலமாக 5 பேருக்கு ரூ.93,600 மதிப்பிலான நலத்திட்ட உதவி என மொத்தம் 31 பேருக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.   கூட்டத்தில் டிஆர்ஓ பத்மாவதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், நகர்மன்ற தலைவர்கள் சாதிர், மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவைர் கேஎன்எல் சுப்பையா, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பிரான்சிஸ் சேவியர், திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tenkasi ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்