(தி.மலை) அரசு கல்லூரி மருத்துவ முகாமில் 500 மாணவர்களுக்கு சிகிச்சை

செய்யாறு, மார்ச் 16: செய்யாறு அரசு கல்லூரியில் நேற்று நடந்த பல் மருத்துவ முகாமில் 500 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியில் பல் சிகிச்சை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் ந.கலைவாணி தலைமை தாங்கினார். மருத்துவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சைவ செம்மல் சிவத்திரு வ.கண்ணப்பன் அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறப்பு பல் மருத்துவ முகாமில் தமிழ்த் துறையைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர் சித.ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பெ.தேவி, மு.மணி, ப.திருமால், தேவி உட்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கு.கண்ணன் ஏற்பாடு செய்தார்.

Related Stories: