குலசேகரன்பட்டினம் கோயிலில் அம்மன் சப்பரம் ரத வீதியுலா

உடன்குடி,மார்ச் 16: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாசி மாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு அம்மன் சப்பரம் ரதவீதியுலா நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாசி மாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 8மணிக்கு கால சந்தி பூஜையும், மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9மணிக்கு ராக்கால பூஜையும் நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரம் கோயில் வளாகத்தை சுற்றி ரதவீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: