×

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி கோயிலுக்கு உலகிலேயே பெரிய சுடுகழிமண் சிற்பங்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக உலகிலேயே மிகப்பெரிய சுடு கழிமண் சிற்பங்கள். 25அடி உயர பொன்னு சாமி சிலை, 23அடி உயர செங்கமலையான் சிலை. 21.5 அடி உயர பெரியசாமி சிலை. வில்லியனூரில் தயாரித்து 7 லாரிகளில் கிரேன்கள் மூலம் சிறுவாச்சூர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் அருகேயூள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுர காளியம் மன் கோவில் உள்ளது. மாவட்டத்தின் சுற்றுலா தலமான இக்கோயில், இந் துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சில ப்பதிகாரக் கண்ணகியின் சினம் தனித்த தலமாகக் கருதப்படும் இக்கோயிலில் தங்கத் தேர் உள்ளது. இக் கோவிலின் தெய்வமான செல்லியம்மன், தன்னை அரக்கனிடமிருந்து காத்த மதுர காளியம்மனுக்கு கோ விலில் தங்க இடமளித்து விட்டு, 3கிலோ மீட்டர் தொலைவில், பச்சைமலைத் தொடர்ச்சியிலுள்ள பெரிய சாமி மலையடிவாரத்தில் குடியிருப்பதால், வாரத்தில் திங்கள், வெள்ளி மட்டும் சிறுவாச்சூர் கோவிலிலும், இதர நாட்களில் பெரிய சாமி மலையடிவாரத்திலுள்ள செல்லியம்மன், பெரி யசாமி கோவில்களி லும் பூஜைகள் நடக்கும்.

இதன்கும்பாபிஷேகம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2015ல் நடைபெற்றதை யொட்டி, இந்துசமய அறநி லையத்துறை நிதியுதவி யுடன் மலையடிவாரத்தில் உள்ள பழைய சிலைகளுக்குப் பதிலாக புதிய சிலை கள் வில்லியனூர் கிருஷ்ண முனுசாமி என்ற ஸ்தபதியால் பலலட்சம் மதிப்பில் சுடுகழிமண் சிற்பங்களாக பொன்னுசாமி சிலை, பெரியசாமி சிலை, கிணத்தடி யார், ஆத்தடியார், செல்லியம்மன், சப்தகன்னியர், செங் கமலையான், கொரப்புலி யான், புலிகருப்பையா, குதிரைகள், வீரர் சிலைகள், 18 சித்தர்களின் சிலைகளும் செய்து வைக்கப்பட்டது. இங்கிருந்த பிரமாண்ட பெரியசாமி, செங்கமலையான் உள்ளிட்ட சுமார் 40சிலைக ளை கடந்த 2021அக்டோபர் 5ஆம்தேதி இரவு மர்ம நபர் கள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர். கடந்த ஆண்டு இதனை நேரில் பார்வையி ட்ட இந்துசமய அறநிலைய த்துறை அமைச்சர் சேகர் பாபு, விரைவில் புதிய சுடு கழிமண் சிற்பங்களை செ ய்யவும்,கோவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொ ண்டு 2023 மார்ச், ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படுமென த் தெரிவித்திருந்தார்.இத னைத் தொடர்ந்து வருகிற 27ம்தேதி பெரியசாமி மலையிலும், ஏப்.5ம் தேதி சிறுவாச்சூரிலும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்துள்ளார்.

இதனையடுத்து புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு பகுதியில் புவிசார் குறியீடுபெற்றுள்ள சுடுகழிமண் சிற்பங்கள் புதிதாக செய்ய ஆர்டர் வழங்கப்பட்டு சிற்பங்கள் தயாரிப்புப் பணி முடிவடைந்து, வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து புகழ்பெற்ற சுடு கழி மண் சிற்பங்கள் செய்யும் வில்லியனூர் கிருஷ்ண முனுசாமி அளித்தப் பேட்டியில் தெரிவித்திருப்பதாவது : உலகிலேயே மிகப்பெ ரிய சுடுகழிமண்சிற்பங்கள் சிறுவாச்சூர் மலைக்கோவி லுக்காக தயாரித்து மெரு கேற்றப்பட்டு வருகிறது. உலகில் மிகப்பெரிய சுடு களிமண்ணால் ஆன 25அடி உயர பொன்னுசாமி சிலை, 23அடி உயர செங்கமலையான் சிலை, 21.5அடி உயர பெரியசாமி சிலை, 20 அடி உயர பட்டத்துக் குதிரை சிலைகள் உள்பட மொத்தம் 29 சிலைகள் புவிசார் குறியீடு பெற்ற வில்லியனூர் ஆற்று மண்ணால், புகழ்பெ ற்ற ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் வைத்து தயாரிக்கப் பட்டுள் ளன. இவை 7லாரிகளில் கிரேன்கள்உதவியுடன் வரு கிற 19,20 தேதிகளில் சிறு வாச்சூர் வந்தடையும் எனத்தெரிவித்தார். வி.கி. முனு சாமி எனப்படும் இவர் 3லட்சம் பேர்களுக்கு சுடு களிமண் சிற்பங்கள் தயாரிக்க பயிற்சியளித்துள்ளார். 22 வது தலைமுறையாக இவரது குடும்பம் இப்பணிகளை செய்து வருகின்றனர் என் பது குறிப்பிடத் தக்கது. இதனையடுத்து சிறுவாச்சூரிலும், பெரியசாமிமலை கோவிலிலும் பிரமாண்டயாக சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரு ப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Siruvachur Periyasamy ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...