திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆய்வு கலைஞர் பூங்கா சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. திட்ட இயக்குனர் தண்டபாணி, ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், ஆணையாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் உட்பட வட்ட வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பழையபட்டி ஊரணி குடிமராமத்து பணி மற்றும் கலைஞர் பூங்கா உள்ளிட்ட வளர்ச்சி பணிவுகளையும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார்.

ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மல்லி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் அமைச்சரிடம் கூறினார். மேலும் மல்லி ஊராட்சியில் கலைஞர் பூங்கா சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதற்காக அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இதில் யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம், திருவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் சிந்து முருகன், மல்லி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், மம்சாபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் அய்யனார், திருவில்லிபுத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, கலங்காபேரி பஞ்சாயத்து தலைவர் சங்கிலி ராஜ், அச்சங்குளம் பஞ்சாயத்து தலைவர் விமலா மாரிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: