கம்பம் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி

கூடலூர்: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக, பெண்களுக்கான சிறப்பு தொழில் முனைவோர் பயிற்சி கம்பம்  ஆதிகஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பெண்களுக்கான முன்னேற்றத்தில் இக்கல்லூரியும், இப்பயிற்சி வகுப்பும் சிறப்பாக செயலாற்றி வருவது குறித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். கல்லூரி இணைச்செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்து வாழ்த்திப்பேசினர். கல்லூரி முதல்வர் டாக்டர் ரேணுகா எஸ்டிடி திட்டத்தில் பயிற்சி பட்டறையின் கீழ் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து மூங்கில் பயன்பாட்டு கைவினைப் பொருட்களை செய்ய இலவச பயிற்சி வழங்கினார். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவிகள், இப்பயிற்சிப் பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும், தங்களை சிறந்த தொழில்முனைவோராக உருவாக்கும் என்றனர்.

Related Stories: