நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மையத்தை திமுக ஒன்றியச்செயலாளர் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குல்லலக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தில் ஒன்றியக்குழு நிதி ரூ. 11 லட்சத்தில் புதிய நவீன அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அதனை நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் யசோதா தெய்வராஜ் முன்னிலையில் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாத்துரை, பஞ்சவர்ணம், ஊராட்சி பொறியாளர், செயலர் மற்றும் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை, திமுக நிர்வாகி பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.