அய்யலூர்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பாலத்தோட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (27). இவர் அய்யலூரில் தனியார் கட்டிடக்கலை கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது நிறுவனத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் இருந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளை ஆய்வு செய்த போது தனது வாகனத்தை மர்ம நபர்கள் இரண்டு பேர் திருடி சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வடமதுரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
