×

தூத்துக்குடியில் நாளை முதல் 3 நாட்கள் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்கிறார்

தூத்துக்குடி, மார்ச் 15: தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  அமைச்சர் கீதாஜீவன், நாளை (16ம் தேதி) முதல் 3 நாட்கள் பொதுமக்களை நேரில்  சந்தித்து குறைகளை கேட்கிறார். இதுகுறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். அதன்படி நாளை (16ம் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற  உறுப்பினர் அலுவலகத்திலும், மாலை 5 மணிக்கு மீளவிட்டானிலும் பொதுமக்களை  சந்தித்து குறைகளை கேட்கிறார்.

17ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்த ஆய்வு  கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சிக்கு  உட்பட்ட 23வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். வருகிற 18ம் தேதி காலை 9.30 மணிக்கு மாநகராட்சி 28வது வார்டு  பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். மாலை 3.30  மணிக்கு முத்தையாபுரம் மரியம் மகாலில் நடைபெறும் மகளிர் தின விழா மற்றும்  மாலை 5 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெற உள்ள வியாபாரிகள் சங்க மாநாடு  ஆகியவற்றிலும் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொள்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Minister ,Geethajeevan ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவாக...