பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு துவக்கம்

நாமக்கல்,  மார்ச் 15:  நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வுகள் நேற்று துவங்கியது. முதல் நாளில் 727 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழகம் முழுவதும் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 85 மையங்களில் நேற்று தேர்வு துவங்கியது. தமிழ்தேர்வு நேற்று நடைபெற்றது. அதில், 18 ஆயிரத்து 568 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதுகிறார்கள். 100 தனித்தேர்வர்களும் தேர்வில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற தமிழ்தேர்வினை 727 பேர் எழுதவரவில்லை. 17 ஆயிரத்து, 841 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள்.

Related Stories: