×

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் கோயில் நிலம் மீட்பு

குன்றத்தூர்:குன்றத்தூரில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, தனியார் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து. இதனை  நேற்று அதிகாரிகள் மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இத் திருக்கோயிலின் உபகோயில்களான திருஊரகப் பெருமாள் மற்றும் சேக்கிழார் கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் குன்றத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமாக உள்ளன. அவ்வாறு குன்றத்தூரில் இருந்து திருபெரும்புதூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி அருகே கோயிலுக்கு சொந்தமான இடங்கள் இருந்தன.

அவற்றில் சுமார் 10028 சதுர அடி நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையில் உதவி பொறியாளர், தனி வட்டாச்சியர் (ஆலய நிலங்கள்) ஆகிய அதிகாரிகள் குழுவினர், நில அளவையருடன் சென்று, சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். இதில் மேற்கண்ட நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். முதல் கட்டமாக, கோயில் நிலம் என்பதை குறிக்கும் வகையில் அவற்றில் கற்களை அதிகாரிகள் பதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கோயில் நிலத்தின் தற்கால சந்தை மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Hindu Charities Department ,
× RELATED சித்திரை திருவிழாவையொட்டி...