×

கம்பம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான புளியமரத்தில் அனுமதியின்றி புளியம்பழம் பறித்தவர்கள் மீது புகார்

கம்பம்: கம்பம் சுருளிப்பட்டி செல்லும் சாலையில் இருபுறமும் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 300 க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஒன்றிய அலுவலகத்தில் பளியமரங்களின் மேல் பலன் மகசூல் பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்படும். இந்நிலையில் கம்பம் சுருளிப்பட்டி செல்லும் சாலையில் இரட்டைக்குழாய் வாய்க்கால் அருகே உள்ள புளியமரத்தில் சிலர் பழம் அடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் இன்னும் ஏலம் விடவே இல்லை அதற்குள் யார் அனுமதி கொடுத்தது என்று கேட்டார். அதற்கு அங்க வந்த நபர் ஒருவர் 2 - சி பட்டா உள்ளதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு அலுவலர் ஊராட்சிக்கு சொந்தமான மரம் நம்பர் போடப்பட்டுள்ளது, நீங்கள் பட்டா இருந்தால் கொண்டு வாருங்கள் என்றார். பின்னர் இதுபற்றி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஊராட்சி செயலர் மூலம் அனுமதியின்றி புளியம் பழம் மகசூல் எடுத்ததாக கூறி நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர். அரசுக்கு சொந்தமான மரத்தில் அனுமதியின்றி புளியம் பழம் எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kambam ,
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...